தலைமையாசிரியர்களுக்கான தன்முனைப்பு திட்ட பயிற்சி

நாகப்பட்டினத்தில் தலைமையாசிரியர்களுக்கான கல்வி தன்முனைப்பு திட்ட பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-25 13:43 GMT

நாகப்பட்டினம்

 நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவிலில் உள்ள தனியார்; கல்லூரியில் தலைமையாசிரியர்களுக்கான கல்வி தன்முனைப்பு திட்ட  பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இன்று (25.06.2024) தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கூறியதாவது, கல்வி தன்முனைப்பு திட்டம் என்பது உலகெங்கிலும் உள்ள பல பள்ளிகளில் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இது மாணவர்களைக் குழுக்களாகப் (ர்ழரளநள) பிரித்து, குழுக்களை அடையாளப்படுத்த ஒவ்வொரு குழுக்களுக்கும் வண்ணங்களை பெயர்களாக்கி அடையாளபடுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த நடைமுறையானது நம் நாட்டில் அல்லது மாநிலத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையை பின்பற்றியே நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி தன்முனைப்பு திட்டம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே குழுப்பணி, சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவைதான் இந்த தன்முனைப்பு திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இந்தத் திட்டமானது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும், பணியை வளர்ப்பதற்கும், பல்வேறு கல்வி, மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர் தலைமையை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பு மாணவர்களின் தலைமைத்துவம், பங்கேற்பு மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கிறது.

மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவித்து ஆதரவான பள்ளிச் சூழலை உருவாக்குகிறது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இந்தக் குழுக்களை மேற்பார்வை செய்து, ஒழுங்கமைத்து வழிகாட்ட இந்தக் கையேடு வழங்கப்படுகிறது. இந்த கையேட்டில் உங்கள் பள்ளிகளில் தன்முனைப்பு திட்டத்தை நிறுவுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. மேலும் பள்ளிச் சூழலை மேம்படுத்தவும், குழு அமைப்பின் முக்கிய மதிப்புகளை மேம்படுத்தவும் உதவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் .சுபாஷினி, சர்-ஐசக் நியூட்டன் கல்லூரி தாளாளர் .ஆனந்த், உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தன்முனைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News