நாகப்பட்டினம் : ரூ.36 லட்சம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம், கோட்டூர் கோவில்களுக்கு சொந்தமான ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2024-07-03 03:13 GMT

மீட்கப்பட்ட கோவில் நிலம் 

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.26 லட்சம் மதிப்பிலான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது.இந்த கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரிய உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ராணி தலைமையில் தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள் ) அமுதா,கோவில் செயல் அலுவலர் குணசேகரன்,சரக ஆய்வாளர் சதிஷ்,கோயில் பணியாளர்கள், வருவாய்துறையினர், கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ரூ.26 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.

அதேபோல் கோட்டூர் குடுமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

Similar News