சைட் மியூசியத்தை நாகர்கோவில் திருசிலுவை கல்லூரி மாணவிகள் பார்வை

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நாகர்கோவில் திருசிலுவை கல்லூரி மாணவிகள் பார்வையிட்டனர்.;

Update: 2023-12-08 08:35 GMT
மியூசியத்தை பார்வையிட்ட மாணவர்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாகர்கோவில் திருசிலுவை கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகள் கடந்த 21 நாள்களாக நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்த உள் விளக்கப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இந்த பயிற்சியில் அருங்காட்சியகம் குறித்தும், அதன் வகைப்பாடுகள், செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவு நாளையொட்டி அவர்கள் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்கள், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதற்காக நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி தலைமையில் பயணம் செய்தனர். கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை மாணவிகள் பார்வையிட்டனர்.

Advertisement

அவர்கள் குறவன் இளவரசியை தூக்கி செல்லும் சிற்பம், குறத்தில் இளவரசனை தூக்கிச்செல்லும் சிலை, கர்ணம், அர்ச்சுணன், ரதி, மன்மதன், பீமன், தர்மன், புருஷா மிருகம் உள்பட பல்வேறு சிறப்பங்கள் பார்வையிட்டனர். இந்த கலை சிற்பங்கள் குறித்தும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கம் அளித்தார்.அதன் பின் அவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு பி சைட்டில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமளித்தார்.

அங்கு வைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி, முழு உடல் மனிதனின் எலும்பு கூடு, புதிதாக அமையவிருக்கும் அருங்காட்சியம் மாதிரி, உள்பட அங்கு வைத்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்தியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை அவர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News