நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 2,558 மூட்டை பருத்தி ரூ.58 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2024-03-06 08:47 GMT

பருத்தி ஏலம்

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2,558 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

இந்த வாரம் மொத்தம் 2,558 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் RCH ரகம் ரூ. 6,100 முதல் ரூ. 7,649 வரையிலும், TCH ரகம் ரூ. 7,670 முதல் ரூ. 8,135 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,219 முதல் ரூ. 6,200 வரையிலும் என மொத்தம் ரூ. 58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

Tags:    

Similar News