ராஜேஷ்குமார் எம்பிக்கு வெள்ளி வாள் பரிசு வழங்கிய நகர்மன்ற உறுப்பினர்கள்

சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வரும் நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ராஜேஷ்குமார் எம்பிக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வெள்ளி வாளை பரிசாக வழங்கினர்.;

Update: 2024-03-17 06:58 GMT

நாமக்கல் நகராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், நகராட்சி துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.,யும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இராஜேஸ்குமார் எம்பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து, சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வரும் நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சுற்று பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களான வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி மற்றும் காதப்பள்ளி உள்ளிட்ட, 12 பஞ்சாயத்துகளை ஒன்றிணைத்து தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

Advertisement

அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, எம்.பி., ராஜேஸ்குமார், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் எம்பி ஆகியோருக்கு நகராட்சி சார்பில் நன்றி என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், நகராட்சி கவுன்சிலர்கள் சார்பில், எம்.பி., இராஜேஸ்குமாருக்கு, வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News