நாமக்கல் திமுக சார்பில் செயல்வீர்கள் கூட்டம்

நாமக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நகர கழகத்தின் திமுக சார்பில் செயல்வீர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-29 08:51 GMT

நாமக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நகர கழகத்தின் திமுக சார்பில் செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர். இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், நகர கழக செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், மாவட்ட அவைதலைவர் மணிமாறன், நகர் மன்ற தலைவர் கலாநிதி முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்தகுமார், காங்கிரஸ் நிர்வாகி செழியன் , வார்டு கழக செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News