நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ மனைவி இறுதிச்சடங்கு : எடப்பாடி பங்கேற்பு

நாமக்கலில் முன்னாள் எம்எல்ஏ மனைவி இறுதிச்சடங்கில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-03-16 13:14 GMT
அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் 

நாமக்கல்லில் நடைபெற்ற முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் மனைவி இறுதிச்சடங்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், நகர அதிமுக செயலாளருமான பாஸ்கரின் மனைவி உமா (48), இவர் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல்,

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்று 15ம் தேதி மாலை உயிரிழந்தார். இதையொட்டி இன்று நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வருகை தந்து, உமாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜய பாஸ்கர்,ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். காலை 10 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சேந்தமங்கலம் ரோடு, நகராட்சி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Tags:    

Similar News