நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கைஅம்மன் ஆலய கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. ஹெலிகாப்டரில் கோபுர கலசங்கள் மீது டன் கணக்கில் மலர் தூவினர்

Update: 2024-02-21 09:18 GMT
நாமக்கல் கீரம்பூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு எட்டுக்கை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூரில் பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் கவுண்டர்களில் செம்பூத்தான் குலம், பண்ணை குல குடிப்பாட்டு மக்களின் குலதெய்வமாக எட்டுக்கை அம்மன் வணங்கப்படுகிறது. கடந்த, 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 12 ஆண்டுக்கு பின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றன. கடம் திருக்கோயிலை சுற்றி வந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்களுக்கு மலர்தூவி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் அம்மன் அருள் பெற்றனர். விழாவிற் ஏற்பாடுகளை கீரம்பூா் எட்டுக்கை அம்மன் கோயில் திருப்பணிக் குழுவினா், அறங்காவலா் குழுவினா், செம்பூத்தான் குல, பண்ணை குல பங்காளிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News