ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடிய நாமக்கல் எம்எல்ஏ
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடிய நாமக்கல் எம்எல்ஏ;
By : King 24x7 Website
Update: 2024-03-08 17:32 GMT
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடிய நாமக்கல் எம்எல்ஏ
நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் அனைவருக்கும் மதிய விருந்து பறிமாறினார். இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் கௌதம், ஒன்றிய குழுத் தலைவர் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவர் ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார்,சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தரணிபாபு, தங்கமணி, சின்ராசு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சதீஷ்குமார், ராஜேந்திரன், பொன்னம்மாள், நல்லத்தம்பி, வளர்மதி, நடராஜன் கழக நிர்வாகிகள் விக்னேஷ், ராஜன் மற்றும் அலுவலக ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.