மாணவர்களுக்கு நாமக்கல் எம்எல்ஏ வாழ்த்து!
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமக்கல் எம்எல்ஏ வாழ்த்து.;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 11:18 GMT
மாணவர்களுக்கு நாமக்கல் எம்எல்ஏ வாழ்த்து
கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் வாழ்த்தினார். தென்னிந்திய அளவிலான ஓப்பன் கராத்தே சேம்பியன்ஷிப் போட்டி ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து கலந்துகொண்டவர்களில் சர்வின் முதல் பரிசையும் மகத், லத்தீஷ், ரித்தீஷ் ராகவ் ஆகிய மாணவர்கள் மூன்றாம் பரிசையும் வென்றனர். அவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் வாழ்த்தினார். இதில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் கைலாசம், கராத்தே பயிற்றுனர் கண்ணன், உதவி பயிற்றுனர் சர்மிளா மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.