நாமக்கல் நகராட்சி கூட்டம்
நாமக்கல் நகராட்சி கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணியை, 172.49 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
By : King 24x7 Website
Update: 2024-02-29 13:51 GMT
நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில், சாதாரண மற்றும் அவசர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. சேர்மன் கலாநிதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பூபதி, கமிஷனர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சியில், தினசரி வாரச்சந்தை வளாகத்தில், தெற்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள விற்பனை கூடத்துக்கு, 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் அமைத்து, அணுகு சாலை அமைக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட மற்றும் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில், பாதாள சக்கடை அமைக்கும் பணி, 313.38 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டப்பணியை, 172.49 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது, பாதாள சாக்கடை திட்டத்தை, 5 ஆண்டுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணியை, 22.49 கோடி ரூபாயில், நகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்வது என்பது உள்பட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.