நாமக்கல் புதிய பேருந்துநிலையத்திற்கு கலைஞர் பெயர் - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

நாமக்கல் புதிய பேருந்துநிலையத்திற்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்ட நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-18 09:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் 80 சதவீதம் வரை முடிந்துள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் நாமக்கல்லில் புதிதாக அமைய இருக்கும் பேருந்து நிலையத்திற்கு "டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்" எனவும் பேருந்து நிலையத்தை இணைக்கும் சுற்று வட்ட சாலையில் அமைக்கப்படும் வளைவுகளுக்கு "பேரறிஞர் அண்ணா நினைவு வளைவு" மற்றும் "பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவு" எனவும் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நாமக்கல் நகரின் மையப்பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு முழு உருவச்சிலை ஒன்று அமைக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். 



Tags:    

Similar News