தேப்பெருமாள்நல்லூா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்

கும்பகோணம் அருகே தேப்பெருமாள்நல்லூா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா தொடங்கப்பட்டது.

Update: 2024-05-20 02:45 GMT

தேப்பெருமாள்நல்லூா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்

திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாள்நல்லூரில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் என்கிற வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி விழா நேற்று  தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இவ்விழாநேற்று இரவு வசந்த மாலை வைபவத்துடன் தொடங்கியது. பின்னா், மே 22- ஆம் தேதி காலை 7 மணிக்கு கருட சேவை - சுவாமி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகம், 23- ஆம் தேதி காலை 5 மணிக்கு ருக்மணி கல்யாணம், 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி புறப்பாடு, இரவு 8 மணிக்கு கோணங்கி சேவை, ஆஞ்சநேயா் உற்ஸவம், 24- ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம் ஆகியவை நடைபெறவுள்ளன.
Tags:    

Similar News