நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் மீசலூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக உழவர் பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 பிறந்ததினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-07 10:11 GMT
உழவர் பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் சோற்றில் கை வைக்க முடியும்,விவசாயிகளின் உழைப்பு இந்த நாட்டிற்கு மிகவும் தேவை என்றும் விவசாயிகளை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருப்பர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தான் என்று விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் பேச்சு ...

விருதுநகர் மாவட்டம் மீசலூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாநில துணைத் தலைவர் ரெங்கு தாஸ் தலைமையில் உழவர் பெருந்தலைவர் ஐயா சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் 99 பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு பேசிய அவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தான் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு சென்னையில் திரு உருவ சிலை நிறுவப்பட்டது எனவும்,விவசாயிகளுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் எனவும், விவசாயிகளின் பெருமையை பேசியவர் புரட்சி தலைவர், எம். ஜி.ஆர். அதற்கு பின் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு பின் அதிமுக கழகத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்றும் பேசினார் மேலும் பேசும் பொழுது விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்றும் இன்றைக்கும் தமிழகத்தில் அதுதான் நிலைமை என்றும்,விவசாயிகளின் உழைப்பு இந்த நாட்டிற்கு மிகவும் தேவை என்றும் விவசாயிகளை பற்றி இன்றளவும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பவரும்,மேலும் விவசாயிக்கு பக்கபலமாகவும், அவர்களுக்கு துணையாக இருப்பவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தான் எனவும், நான் ஒரு விவசாயி என்று சொல்வதை பெருமையாக கருதுபவர் எடப்பாடியார் என்றும் விவசாயிகள் தான் நாட்டை ஆள வேண்டும் என்ற நாரண சாமி நாயுடுவின் கனவை நிறைவேற்றியவர் எடப்பாடியார்தான் எனவும், அவருடைய ஆட்சி விவசாயிகளின பொற்காலம் ஆட்சி எனவும், அவருடைய ஆட்சி காலத்தில் டெல்டா பகுதி மக்கள் கஜா புயலால் மிகவும் பாதிப்படைந்ததாகவும், உடனடியாக அவர்களுக்கு பயிர் கடன், மற்றும் உரிய இழப்பீடு தொகையை கொடுத்து விவசாயிகளை பாதுகாத்தவர் எனவும், விவசாய பெருமக்களுக்கு என்றும் உயிர் தோழனாக இருக்கக்கூடியவர் அதிமுக கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் பேசினார்.

Tags:    

Similar News