24மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி: காவல் ஆணையர் ஏற்றி வைப்பு

கோவையில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடியை காவல் ஆணையர் ஏற்றி வைத்தார்.

Update: 2024-01-27 11:02 GMT

தேசியக் கொடி ஏற்றிய காவல் ஆணையர்

கோவை:நாட்டின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 101 அடி கம்பத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் பறக்க கூடிய தேசியக் கொடியை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

இதனை அடுத்து பாதுகாப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினருக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாக கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக ஒரு லட்சம் மதிப்பிலான ரிப்ளக்டர் ஜாக்கெட் எனும் பாதுகாப்பு உடை வழங்கும் நிகழ்வு மாநகர காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இன்னர் வீல் கிளப் அமைப்பின் தலைவர் புவனா சதீஷ்,கோவை மாநகர ஊர்க்காவல் படை உதவி ஆணையர் தேன்மொழி ராஜராம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில் காவல் ஆணையர் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு ரிப்ளக்டர் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.இரவு நேர பணிகளின் போது ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பு கருதி இந்த உடைகள் வழங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News