தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் நிர்மலா பள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Update: 2024-01-25 01:55 GMT


அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் நிர்மலா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தேசிய பெண் குழந்தைகள் தினமான அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் அரியலூர் திருச்சி சாலையிலுள்ள நிர்மலா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் மகளிர் நீதிபதி கற்பகவள்ளி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன் என்றும் எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்காத வகையில் கவனமுடன் செயல்படுவேன் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கபட்டது. இதில் அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News