தேசிய ஊசு போட்டி - நத்தம் மாணவர் சாதனை
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஊசு (தற்காப்பு கலை) போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மாணவர் யஷ்வந்த் சஞ்சய் வெண்கல பதக்கத்தை வென்றார்.;
Update: 2024-02-26 07:57 GMT
மாணவர் யஷ்வந்த் சஞ்சய்
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஊசு (தற்காப்பு கலை) போட்டி ஜம்மு காஷ்மீரில் நடந்தது. இந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் மாணவர் யஷ்வந்த் சஞ்சய் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 3 ஆம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.இதனையடுத்து சாதனை படைத்த யஷ்வந்த் சஞ்சய்க்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.இதற்கு என்.பி.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மருது கண்ணன் தலைமை தாங்கினார்.இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர் யஷ்வந்த் சஞ்சையை பாராட்டினர்.