பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு

குழந்தைகள் முறைகேடு தடுப்பு மற்றும் நல்வாழ்வு மேம்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ் இரண்டு நாள் கருத்தரங்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

Update: 2023-12-21 06:33 GMT

கருத்தரங்கம் 

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்பும் ஒருங்கிணைந்து "குழந்தைகள் முறைகேடு தடுப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்" எனும் தலைப்பின் கீழ் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் முதல் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறையின் துறைத்தலைவர் மற்றும் இவ்விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர். மங்களேஸ்வரன் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று வரேவேற்புரையாற்றினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். செல்வம் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தொழில்முறை சமூகப்பணிக்கான இந்திய சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் முனைவர். சாரீப் துவக்கவுரையாற்றினார். மேலும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கான தெலுங்கானா மாநில ஆணையத்தின் உறுப்பினர் பிருந்தாதர் ராவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பெங்களூரிலுள்ள குழந்தை உரிமைகள் அறக்கட்டளையின் இயக்குநர் முனைவர் வாசுதேவ சர்மா குறிப்புரையாற்றினார். இந்தியா அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்பின் அறங்காவலர் சகிலா ராமநாதன் பாராட்டு உரையாற்றினார். இந்தியா அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்புச் செயலாளர் நன்றியுரையுடன் முதல் நாள் கருந்தரங்கு நிறைவடைந்தது

Tags:    

Similar News