இயற்கை உரம் தயாரிக்கும் புதிய இயந்திரம்
சருகுகளை தூளாக்கி இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 11:06 GMT
இயற்கை உரம்
மாமல்லபுரத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், பிற குடைவரை சிற்பங்களின் வளாகங்களில், நீண்டகாலமாக, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. மரங்களிலிருந்து இலைகள், சருகுகள் உதிர்ந்து, தரையில் குவிகின்றன. தொல்லியல் துறையினர், அவற்றை தினமும் அகற்றுகின்றனர்.
அத்துறைக்கு, தனியார் நிறுவன சமூக பொறுப்பு திட்டங்களை செயல்படுத்திவரும், 'ஹேன்ட் இன் ஹேன்ட்' நிறுவனம், சிற்ப வளாகங்களில் குவியும் இலை, சருகுகள் ஆகியவற்றை துாளாக்கி, இயற்கை உரம் தயாரிக்க முடிவெடுத்துள்ளது. அதற்காக, சருகுகளை துாளாக்கும் இயந்திரத்தை வழங்கி, கோனேரி மண்டப வளாக பகுதியில் பொருத்தியுள்ளது. சிற்ப வளாகங்களிலிருந்து, அப்பகுதிக்கு சருகுகளை ஏற்றிச் செல்ல, பேட்டரி வாகனமும் அளித்துள்ளது