பெண்களுக்கு இலவச இயற்கை மருத்துவ முகாம்
கரூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச இயற்கை மருத்துவ முகாம் இன்று துவக்கம்.;
Update: 2024-03-10 10:11 GMT
மருத்துவ முகாம்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் ,சக்தி நகர் பகுதியில் குமார் இயற்கை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் குமார் மருத்துவமனை நடத்துகிறது. இந்த மருத்துவமனையில் நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, உண்ணா நோன்பு, காந்த சிகிச்சை, வாழை இலை குளியல், அக்குபஞ்சர் சிகிச்சை, யோகா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று, சிகிச்சை தேவைப்படுபவருக்கு சலுகை விலையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர் குமார் தெரிவித்துள்ளார்.