மதுக்கூர் அருகே வாலிபரை வாளால் வெட்டிய 2 பேர் கைது

மதுக்கூர் அருகே வாலிபரை வாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-02-08 15:51 GMT
கைது

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்தவர் அறிவழகன் மகன் அஜித்குமார் (வயது 24). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன், சந்திரதாசன் ஆகியோருடன் சம்பவத்தன்று மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி  கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர்.

பின்னர் அஜித்குமார், அந்த ஓட்டலின் வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஆவிக்கோட்டையை சேர்ந்த வீரமணி (41) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

Advertisement

அப்போது அஜித்குமார் மீது மேலே மோதுவது போல் வந்ததாகவும், ஏன் இப்படி வந்தாய் என்று அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி தனது நண்பர்களான ரத்தினகுமார் 38), ராஜா (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து அஜித்குமாரை தாங்கள் வைத்திருந்த வாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

துகுறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, ராஜா, ரத்தினகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News