திருமருகல் அருகே தீ பற்றி எரிந்து குடிசை வீடு சேதம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தீ பற்றி எரிந்து குடிசை வீடு சேதம் அடைந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-16 15:02 GMT
எரிந்த குடிசை வீடு
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தீ பற்றி எரிந்து குடிசை வீடு சேதம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 75).இவர் மனைவி லலிதா (வயது 65). இவர்கள் தனது குடிசை வீட்டில் சிறிய டீக்கடை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டின் கூரையில் தீ பற்றி குடிசை முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிந்தது.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீ அணைக்க முயற்சித்தனர்.
தீயை அனைப்பதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சேதமானது.அதிர்ஷ்டவசமாக கோவிந்தராஜ் மற்றும் லலிதா இருவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.