திருபுவனத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
திருபுவனத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-05-05 08:08 GMT
திருபுவனத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கும்பகோணம் அருகே திருபுவனம் பேரூராட்சியில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருபுவனம் நகர கழக செயலாளரும் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சிங் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் 151 பெண்களுக்கு காட்டன் புடவைகளும், 75 நபர்களுக்கு பனைவிசிறிகள், மூன்று பேருக்கு சைக்கிள்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவமணி, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், கேபிள் குமரன், வக்கீல் கர்ணன், திருபுவனம் பேரூர் கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், குருமூர்த்தி, ஆட்டோ சங்கர், அம்மா அய்யப்பன், ஜெகன் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.