நீர்மோர்பந்தல் டீ பந்தலாக மாறிய ருசிகம்: பொதுமக்கள் வரவேற்பு

புதுக்கோட்டையில் நீர்மோர்பந்தல் டீ பந்தலாக மாறியது.;

Update: 2024-05-17 12:58 GMT
தண்ணீர் பந்தல் டீ பந்தலாக மாறியது

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கேற்ப தமிழக முழுவதும் கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் திணிக்கும் வகையில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தலை கழகத்தினர் திறந்து வைத்து வருகின்றனர். நீர் மோர் பந்தலில் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர்மோர், மற்றும் பழ வகைகள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் புதுக்கோட்டை கழகம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது அதிலும் குறிப்பாக மக்களை கவரும் வகையில் நீர் மோர் பந்தலில் கழக நிர்வாகிகள் பொது மக்களுக்கு குடைகள், பிரியாணி, ஐஸ்கிரீம், என வித்தியாசம் வித்தியாசமாக வழங்கினார்கள். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வந்தது இந்நிலையில்,

Advertisement

இன்று காலை முதல் புதுக்கோட்டையில் சாரல் மழை பெய்தது இதன் காரணமாக புதுக்கோட்டை டாக்ஸி மார்க்கெட் தண்ணீர் பந்தலில் நீர்-மோர் பழரசங்கள் வழங்குவதை தவிர்த்து தெற்கு நகர கழகம் சார்பில் சுடசுட சம்சா ,டி ,காபி ஆகிய வழங்கப்பட்டது மலையில் நடந்தபடி வந்த பொதுமக்களுக்கு நகர செயலாளர். சேட்டு தலைமையில் நிர்வாகிகள் டீ காபி மற்றும் சம்சா வழங்கினார்கள் அந்தந்த சீதோசன நிலைக்கு ஏற்ப கழக நிர்வாகிகள் வித்தியாசமாக உபசரிக்கும் அணுகுமுறை கண்டு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் .

Tags:    

Similar News