பார்வையற்றோரிடம் மனுக்கள் வாங்காமல் புறக்கணிப்பு
தேர்தல் விதிகளை கூறி பார்வையற்றோரிடம் மனுக்கள் வாங்காமல் அதிகாரிகள் புறக்கணித்ததால் நான்கு மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.;
Update: 2024-04-25 00:55 GMT
தேர்தல் விதிகளை கூறி பார்வையற்றோரிடம் மனுக்கள் வாங்காமல் அதிகாரிகள் புறக்கணித்ததால் நான்கு மணி நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தென்பழஞ்சி கோ புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் பார்வையற்றோர் மறுவாழ்வு சங்கம் நடத்தி வருகிறார். தென்பழஞ்சி கோ.புத்துட்டியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 61 வீட்டுமனை பார்வையற்றவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா அப்போதைய அரசால் வழங்கப்பட்டது.மேலும் பார்வையற்றோர்களுக்கான குழு தொழில் கூடம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது மீதமுள்ள 75 பேருக்கு இலவச மனை வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனுவ அளித்தனர் .தேர்தல் முடிந்ததும் ஏற்பாடு செய்வதாக கூறினார்.இந்நிலையில் பார்வையற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் 50 க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர் .காலை ஒன்பதரை மணி முதல் ஒன்றரை மணி வரை தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் அணிஸ் அக்தர் பணிக்கு வரவில்லை .இதனை தொடர்ந்து பார்வையற்றோர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேள்வி கேட்டனர் ஆனால் தாசில்தார் தற்போது வேறு வேலைக்கு சென்று இருப்பதால் வருவது பற்றி கூற முடியாது என்றும் வேண்டுமென்றால் புதன்கிழமை வாருங்கள் என கூறினர் .இதனையடுத்து பார்வையற்றோர் மறுவாழ்வு சங்கத்தில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்து மீண்டும் திரும்பி சென்றனர்.சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவை தாலுகா அலுவலக வாசலிலேயே சாப்பிட்டு சென்றது பரிதாபமாக இருந்தது. மதுரை மாவட்ட நிர்வாகம் பார்வையற்றவர்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்