வண்டலுார் பூங்கா பூங்காவில் விலங்கு பராமரிப்பில் அலட்சியம்

வடலூர் பூங்காவில் விலங்கு பராமரிப்பில் அலட்சியம்

Update: 2024-03-31 15:46 GMT
வடலூர் பூங்காவில் விலங்கு பராமரிப்பில் அலட்சியம்
வண்டலுார் பூங்காவில், அனுமன் குரங்கை தொடர்ந்து, காட்டுமாடு ஒன்று, கூண்டில் இருந்து தப்பியது. விலங்கு பராமரிப்பில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், சமீபத்தில், இரண்டு அனுமன் குரங்குகள் கூண்டில் இருந்து தப்பி, காட்டுப்பகுதிக்கு சென்றன. பல நாட்கள் தேடுதலுக்கு பின், இரண்டு குரங்குகளும் பிடிப்பட்டன. இந்த நிலையில் நேற்று, காட்டுமாடு ஒன்று, கூண்டில் இருந்து தப்பியுள்ளது. காட்டு மாடுகள் பராமரிக்கும் கூண்டில், கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு, அனுபவம் இல்லாத ஊழியர் பணியமர்த்தப்பட்டதாகவும், கேட்டை திறக்கும்போது ஒரு காட்டுமாடு தப்பி, காட்டுப்பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தப்பிய காட்டுமாடை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்பூங்கா, காட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்குகிறது. தற்போது, 30க்கும் அதிகமானவை உள்ளன. தொடர்ந்து, எண்ணிக்கை அதிகரிப்பதால், பார்வையாளர்களின் வசதிக்காக தனியாக 'காட்டுமாடு சபாரி' ஒன்றை துவக்க, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News