திருவள்ளுவர் சிலைக்கு அயலக தமிழர் இளைஞர்கள்  மரியாதை 

வேர்களைத்தேடி என்ற பண்பாட்டு பயண நிகழ்ச்சியில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை வெளிநாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

Update: 2024-01-04 06:15 GMT

வேர்களைத்தேடி என்ற பண்பாட்டு பயண நிகழ்ச்சியில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை வெளிநாடுகளை சேர்ந்த 57 இளைஞர்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர். 

கன்னியாகுமரி மாவட்டம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட பிற துறைகள் சார்பில்  வேர்களைத்தேடி என்ற  பண்பாட்டு பயண நிகழ்ச்சி அயலக தமிழ்  இளைஞர்கள் சார்பில் நடைபெற்றது.       

நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் இருந்து 14 இளைஞர்கள், கனடாவில் இருந்து  8 இளைஞர்கள், பிஜியில் இருந்து 9 இளைஞர்கள், இலங்கையில் இருந்து 26 இளைஞர்கள் என 57 இளைஞர்கள் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகனாந்தர் பாறை உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு  சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்கள்.  நிகழ்வில் இலங்கை தமிழர் மறுவாழ்வு (ம) அயலக தமிழர் நலத்துறை ஆணையரக தனித்துணை ஆட்சியர் (மு.கூ.பொ) எஸ்.செண்பக வள்ளி, கண்காணிப்பாளர் கனிமொழி,  உதவி  சுற்றுலா துறை அலுவலர் த.கீதா,   உட்பட பலர் கலந்து கொண்டார்கள்

Tags:    

Similar News