நெல்லையில் சிறப்பு ஊஞ்சல் சேவை உற்சவம்
தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெறுகிறது.;
Update: 2024-01-20 07:56 GMT
ஊஞ்சல் உற்சவம்
திருநெல்வேலி மாநகர பேட்டை அருகே உள்ள வேங்கடநாதபுரம் தென்திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி திருப்பதி கோயிலில் நேற்று தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் காட்சி அருளினார்.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.