திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-05-01 08:32 GMT
நீர்மோர் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, பழரசங்களை வழங்கினார்.அப்போது முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.