நேச நாயனார் குருபூஜை திருவீதி உலா
நேச நாயனார் குருபூஜை திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நேச நாயனார் குருபூஜை திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்து சமயத்தில் முக்கிய கடவுளாக சிவனை ஏற்று காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். சிவனுடைய புகழைப் பரப்புவதற்கும், அவரது அருளை பெறுவதற்கும் 63 நாயன்மார்கள் அக்காலத்தில் பொதுமக்களிடையே கொண்டு சென்று பக்தி மார்க்கத்தை ஏற்படுத்தினர்.
இந்த 63 நாயன்மார்களும் இறைவனுக்கு நிகராக போற்றப்படுகின்றனர். இதன் அடிப்படையில், கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், 63 நாயன்மார்களுக்கும் சிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒவ்வொரு நாளில் ஒரு சிறப்பு இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக அந்த நாளில் குருபூஜையாக நடத்தி வழிபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் நேச நாயனார்-க்கு நேற்று குருபூஜை விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, நேற்று இரவு கோவில்மாட வீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவனடியார்கள் ஏராளமானோர் பங்கேற்று, பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து, பக்தி பரவசத்துடன் ஊர்வலத்தை நடத்தினர். இந்த ஊர்வலத்தை ஆங்காங்கே ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து வழிபட்டு வணங்கினர்.