ட்ரோன்களில் மருந்து விநியோகம் செய்ய புதிய ஏற்பாடு

செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்ரோன்கள் மூலம் மருந்து கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

Update: 2024-04-10 01:52 GMT
ட்ரோன்களில் மருந்து விநியோகம் செய்ய புதிய ஏற்பாடு

செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, மருந்துகளை டிரோன் கேமரா வாயிலாக கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்ட முயற்சி நேற்று நடந்தது. இது குறித்து, நந்திவரம் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கூறியதாவது,

மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, மிக வேகமாக மருந்து பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, இந்த டிரோன் கேமரா பயன்படுகிறது. இத்திட்டம், பல மாநிலங்களில் வெற்றி அடைந்துள்ளது. தமிழகத்தில், முதல்முறையாக நந்திவரம் அரசு மருத்துவமனையில், வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட்டது.

நேற்று காலை 11:30 மணிக்கு, செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, மருந்துகளை எடுத்துக்கொண்டு, டிரோன் கேமரா கிளம்பியது. செங்கல்பட்டு கொளவாய் ஏரி வழியாக கிளம்பி, சாலை வழியாக, 200 அடி உயரத்தில் பறந்து, 25 நிமிடங்களில், நந்திவரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இந்த டிரோன் கேமரா, நான்கு அடி அகலம், மூன்றடி நீளத்தில் உள்ளது. இதன் மொத்த எடை ஏழரை கிலோ. இதில், அதிகபட்சமாக 50 கிலோ வரை கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News