புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் போராட்டம்
வாணியம்பாடி அருகே திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவனை கைது செய்யக்கோரி காவல்நிலையம், மற்றும் அரசு மருத்துவமனையை பெண்ணின் உறவினர்கள் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி இவருக்கும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, அதனை தொடர்ந்து அருண்குமார் சென்னையில் பணிபுரிவதால் தனது மனைவி தேன்மொழியுடன் சென்னைக்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே, அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டதாக வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருண்குமார் சென்னையில் இருந்து தனது மனைவி தேன்மொழியை அழைத்து வந்து, தேன்மொழியின் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார்,
இதனால் அதிக மன உளைச்சலில் இருந்த தேன்மொழி நேற்று தனது வீட்டில் விஷம் அருந்தியும், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார், உடனடியாக இதனை கண்ட தேன்மொழியின் அண்ணன் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேன்மொழி இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,
இதனை தொடர்ந்து தேன்மொழியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேன்மொழியின் மரணத்திற்கு காரணமான அவரது கணவர் அருண்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேன்மொழியின் உறவினர்கள் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், அங்கு காவலர்கள் புகாரை பதிவு செய்த காலம் தாமதம் செய்ததாக கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்,
அதனை தொடர்ந்து காலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட தேன்மொழியின் உடல் மாலை வரை பிரேத பரிசோதனை செய்யமால் இருந்ததால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுப்பட்டனர், இதனை தொடர்ந்து திருமணம் ஆகி 6 மாதங்களே ஆன நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர், பிரேமலதா மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு அருண்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தேன்மொழியின் உடலை அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்...