புது மாப்பிள்ளை தற்கொலை

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட இண்டூரில் கணவன் மனைவி தகராறில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-23 12:34 GMT

தற்கொலை 

தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட இண்டூர் அருகே பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சத்யராஜ் பட்டதாரியான இவர், திருப்பூரில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் திவ்யலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இரு வீட்டார் சம்மதத்துடன் திவ்யலட்சுமியை சத்யராஜ் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன், இருவரும் இண்டூர் வந்தனர்.கடந்த வியாழக்கிழமை இரவு கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சத்யராஜ், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த இண்டூர் காவலர்கள், அவரது உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News