சலவைத் தொழிலாளர்களுக்கான புதிய கட்டடம்
ரூ.23 இலட்சம் மதிப்பில் அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய சலவைத் தொழிலாளர்களுக்கான புதிய கட்டடம் திறக்கப்பட்டது.;
By : King 24x7 Website
Update: 2023-10-27 12:55 GMT
அதிநவீன சலவைக்கூடம்
திருவண்ணாமலை நகராட்சி தாமரைகுளம் அருகில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறையின் சார்பில் ரூ.23 இலட்சம் மதிப்பில் அதிநவீன குடிநீர் இயந்திரங்களுடன் கூடிய சலவைத் தொழிலாளர்களுக்கான புதிய கட்டடத்தினை மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்து தெரிவித்தாவது: திருவண்ணாமலை நகராட்சி வார்டு -28 தாமரைகுளம் அருகில் அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய சலவைத் தொழிலாளர்களுக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள தாமரைகுளக்கரையில் 60 வருடங்களாக சலவை தொழில் செய்து வருகின்றனர் எனவே சலவை தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நராட்சி வருவாய் நிதியின் மூலம் ரூ.20 இலட்சத்தில் சலவை தொழில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்தை சுற்றி சுற்றுசுவர், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் மிகவும் பிற்படுத்தப்டோர் நலத்துறையின் மூலமாக தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கங்த்திற்காக ஆண்கள் சுய உதவி குழுவிற்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சலவை பணிகளை மேற்கொள்ளுவதற்கு அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும் சலவைத் தொழிலாளர்களுக்கான' கட்டடத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சலவை தொழிலாளர்களிடம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம்சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் இரா.ஸ்ரீதரன், திருவண் ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், நகராட்சி மன்ற துணை தலைவர் ராஜாங்கம், திருவண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, வண்ணாமலை நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் கோபிசங்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.