ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை

Update: 2023-11-13 05:36 GMT

மாணவர்களுக்கு தீபாவளி பரிசு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில், ரோட்டரி சங்கம் சார்பில் பெற்றோரை இழந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் இம்மானுவேல் சசிகுமார் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் பாபு வரவேற்றார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மணிகூண்டு துவக்கப்பள்ளி, ஆர்.சி., நடுநிலைப்பள்ளி மற்றும் ஏமப்பேர் அரசு பள்ளியில் பயிலும் 70 மாணவ, மாணவிகளுக்கு தலா 1,500 ரூபாய் மதிப்பில் புதிய ஆடைகள்,இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News