திருப்பூர் மாநகராட்சியில் புதிய குடிநீர் திட்டம்
திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் திட்டம் துவக்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 09:14 GMT
திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில்,திருப்பூர் மாநகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு அண்மையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நான்காவது குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்திற்கு வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் சென்று, நீரேற்றும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், வருகின்ற கோடைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில்,முறையான குடிநீரை வழங்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.