சேலத்தில் புதுமாப்பிள்ளை கொலை

சேலத்தில் மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-02-28 01:49 GMT

புதுமாப்பிள்ளை கொலை

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 25-ந் தேதி கந்தம்பட்டி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அந்த வாலிபருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவருடன் கோபித்துக் கொண்டு அந்த பெண் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக முகமது பயாஸ், நபிகான் மற்றும் பழனிபாரதி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் புதுமாப்பிள்ளை, மனைவியின் பெற்றோரிடம் வரதட்சணையாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உங்கள் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் சமரசம் பேசியும் ஏற்று கொள்ளாததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 37), பிரவீன் (26) என மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News