பச்சைமலை முருகன் கோயிலில் புதிய கிரிவல பாதை
பொத்தனூர் பச்சைமலை முருகன் கோயிலில் புதிய கிரிவல பாதையை சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து அமைத்தர்.
Update: 2024-06-16 14:14 GMT
பரமத்தி வேலூர் அருகே உள்ள, பொத்தனூர் பச்சை மலையில் புதியதாக கிரிவல பாதை அமைக்கப்பட்டது. இதில் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, நாமக்கல், கரூர்,சேலம் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவனடியார்கள் மற்றும் அனைத்து சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு உழவாரப்பணி மூலம் பச்சைமலை சுற்றி உள்ள காய்ந்த செடிகள் மற்றும் புதர்களை அகற்றி புதியதாக கிரிவலப் பாதை அமைக்கப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு பச்சை மலையினை தூய்மை செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகிகள் சிவனடியார்கள்,தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.