கும்பகோணம் வழியாக கோவை புதிய ரயில் சேவை தொடக்கம்

கும்பகோணம் வழியாக கோயம்புத்தூர் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2024-04-16 08:49 GMT

ரயில் நிலையம் 

சென்னை எழும்பூர் - கோவை இடையே தேர்தல் கால சிறப்பு இரயில் இயக்கம் (வண்டி எண்:06003/06004) வழி : கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர்.

வரும் 18.04.2024 வியாழன் மற்றும் 20.04.2024 சனி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு கும்பகோணத்திற்கு இரவு 11.30 மணிக்கும் பாபநாசத்திற்கு 11.45 மணிக்கும் வருகை தரும் இந்த சிறப்பு விரைவு இரயில் பழனிக்கு காலை 6.00 மணிக்கும் பொள்ளாச்சி வழியாக கோவைக்கு காலை 8.20 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கத்தில்,

கோவையில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை 19.04.2024 மற்றும் 21.04.2024 ஞாயிறு கிழமைகளில் இரவு 8.40 க்கு புறப்பட்டு பொள்ளாச்சி, வழியாக பழனிக்கு இரவு 11.00 மணிக்கும் பாபநாசத்திற்கு அதிகாலை 3.05 மணிக்கும் கும்பகோணத்திற்கு 3.25 மணிக்கும் வந்து காலை 10.25 மணிக்கு சென்னை சென்றடையும். மேற்படி இந்த சிறப்பு ரயில் நிரந்தரமாக இயக்க அதிகம் வாய்ப்புள்ளதால்,

பழனி திருக்கோயில் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இதை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம். இந்த சிறப்பு விரைவு இரயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும். முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளவும். பாபநாசம் - பழனி (வியாழன்/சனி இரவு 11.45 மணி) பாபநாசம் - சென்னை (வெள்ளி/ஞாயிறு அதிகாலை 3.05 மணி) என்றும் மக்கள் சேவையில், T.சரவணன் B. Com; இரயில் பயணிகள் சங்க செயலாளர், பாபநாசம். Contact :9791383802

Tags:    

Similar News