மதுரை விமான நிலையத்தில் புதிய வாகன நுழைவு கட்டணம் இன்று முதல் அமல்

மதுரை விமான நிலையத்தில் புதிய வாகன நுழைவு கட்டணம் நான்கு மடங்கு உயர்வு என வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Update: 2024-06-01 12:40 GMT

மதுரை விமான நிலையத்தில் புதிய வாகன நுழைவு கட்டணம் நான்கு மடங்கு உயர்வு என வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.


மதுரை விமான நிலையத்தில் புதிய வாகன நுழைவு கட்டணம் இன்று முதல் அமல் - முன்பை விட நான்கு மடங்கு உயர்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி மதுரை விமான நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளை அழைத்துச் செல்லவும் விமான நிலையத்தில் கொண்டுவந்த விடுவதற்காக ஏராளமான கார்கள் வந்து செல்கின்றன. மதுரை மாநாடு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு விமான நிலைய நுழைவுப் பகுதியில் இன்பச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஏற்கனவே சுங்கச்சாவடி அமைத்து ஆட்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக தானியங்கி வாகன கட்டண வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் வாகன டோல்கேட் குத்தகை ஒப்பந்தங்கள் விடப்பட்டு வட மாநிலத்தவர் ஒருவர் 12 லட்சம் ரூபாய்க்குஒப்பந்தம் எடுத்ததிருந்த நிலையில் நேற்றுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது டோல்கேட் வசூல் ஒப்பந்தம் முடிந்து விட்ட நிலையில் இந்த மாதத்திற்கான டோல்கேட் பார்க்கிங் ஒப்பந்தம் விடப்பட்டு வட 4,5 தனி நபர் இரண்டு மடங்கு அதிகமாக 25 லட்சத்திற்கு இந்த ஒப்பந்தத்தை எடுத்திருக்கின்றனர்.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் 24 மணி நேரத்திற்கு 300 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான திட்டம் அமலுக்கு வந்தது. பயணிகளை அழைத்து செல்ல வரும் வாகனங்களுக்கான கட்டணத்தை பொறுத்தவரையில் 12 நிமிடம் 10 விநாடிக்கு( விமான நிலையம் நுழைந்து வெளியேறும் வரை) கட்டணம் இல்லை. 12 நிமிடம் 10 விநாடியை தாண்டினால் தனியார் காருக்கு ரூ.30, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும். வணிக வாடகை வாகனங்களுக்கு 2 நிமிடம் 30 வினாடிகள் வரை கட்டணம் இல்லை. இந்த நேரத்தை தாண்டினால், வாடகை கார்களுக்கு ரூ.108, பஸ், டிரக்குகளுக்கு ரூ.170, டெம்போ, மினி பஸ்களுக்கு ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படும். பிற வணிக வாகனங்களில் காருக்கு ரூ. 135, பஸ், டிரக்குகளுக்கு ரூ.211, டெம்போ, மினி பஸ்களுக்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மாத கட்டண முறையும் உண்டு. அதில் விமான நிலைய ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை. சரக்கு பிரிவுக்கான டெம்போவுக்கு ரூ. 2 ஆயிரம், டிரக்குகளுக்கு ரூ. 3 ஆயிரம், பிற கார்களுக்கு ரூ.500, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.250, விமான நிலைய சரக்கு பிரிவை சேர்ந்த உரிமதாரர்கள், முகவர்களின் வாகனங்களுக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலைய நுழைவாயில் மட்டும் உள்ளே செல்ல வெளியே செல்ல என இரு டோல்கேட் இருக்கும் தற்போது கூடுதலாக கார் பார்க்கிங் ஏரியாவிலும் டோல்கேட் உள்ளதால் இரண்டு இடங்களிலும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும்போது கால விரயம் ஆவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் பழைய நிர்வாகம் முப்பது ரூபாய் கட்டணம் வசூலித்து நிலையில் புதிய நிர்வாகம் முன்பு இருந்த வாகன டோல்கேட் கட்டணத்தை விட நான்கு மடங்கு அதிகரித்து ரூபாய் 120 என அறிவித்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News