திண்டுக்கல் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்த புதிய சலவை இயந்திரங்கள்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.26 லட்சத்தில் வழங்கப்பட்ட 2 புதிய சலவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
Update: 2024-06-13 06:16 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.26 லட்சத்தில் வழங்கப்பட்ட 2 புதிய சலவை இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை(ஜூன் 11) பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. புதிய சலவை இயந்திரங்களை, மருத்துவமனை பயன்பாட்டுக்கு மருத்துவக் கல்லூரி முதன்மையர் சுகந்தி செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) தொடங்கி வைத்தார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.