புதிய வார சந்தை திறப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் ரூபாய் 5.75 லட்சம் மதிப்பில் புதிய வார சந்தையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.;

Update: 2024-02-25 07:27 GMT

வாரச்சந்தை திறப்பு 

தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 5.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், காய்கறி சந்தை, கால்நடை கொட்டகை போன்றவற்றை  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ,சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

Advertisement

அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் உப்பிடமங்கலம் வார சந்தை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் , உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் தங்கராஜ், பேரூராட்சி தலைவர் திவ்யா தங்கராஜ் , துணைத் தலைவர் பாக்கியலட்சுமி கருப்பண்ணன், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், அரசு அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News