இல்லந்தோறும் புதிய இளைஞர் அணி சேர்க்கை முகாம்
கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்
நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கிணங்க இல்லந்தோறும் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் வரவேற்புரை ஆற்றனார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கி, புதிய இளைஞர் அணி சேர்க்கையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆர்.விநாயகமூர்த்தி, இளைஞர் அணி நகர துணை அமைப்பாளர்கள் ஓபுளிமோகன், ஆசைத்தம்பி மணிகண்டன், பாண்டியன், லோகசரவணன், சலீம்.14 வது வார்டு செயலாளர் எஸ்.அமிர்தலிங்கம், ஆர்.யோகராஜன், வார்டு இளைஞர் அணியைச் சேர்ந்த கிஷோர், சிவக்குமார், மாணிக்கம், செல்வராஜ், கார்த்திக், லவக்குமார், லோகபிரசாத், கவிபாரதி, சிபி, பரத், கிருஷ்ணன், கே.கே.குமார், வெங்கடேஷ், யுவராஜ் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் வெண்ணந்தூர் பேரூர், அத்தனூர் பேரூர் ஆகிய பகுதிகளில் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி தலைமையில், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ், கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் முன்னிலையில் இல்லந்தோறும் புதிய இளைஞர் அணி உறுப்பினர்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை அமைப்பாளர்கள் அருள், வித்யாசாகர், தினேஷ், வெண்ணந்தூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், அத்தனூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ் மற்றும் துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி வார்டு கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.