நாமக்கல் சேலம் சாலையில் சாரதி டி.வி.எஸ் ஷோரூமில் தீ விபத்து !

நாமக்கல் சேலம் சாலையில் சாரதி டி.வி.எஸ் என்ற பெயரில் டுவீலர் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் இரவு திடீரென ஷோரூமின் பின்புறம் உள்ள மெக்கானிக் சர்வீஸ் பகுதியில் இருந்து புகை மூட்டம் வ

Update: 2024-10-19 05:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் இச்சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஷோரூமில் உள்ள சர்வீஸ் பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்தனர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எரிந்து கொண்டிருந்த தீயை முழுவதுமாக அனைத்தனர். சர்வீஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மற்றும் சர்வீஸ்க்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 81 டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன, இதனால் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. டுவீலர் ஷோரூமில் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என நாமக்கல் தீயணைப்புப் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருவதோடு மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாமா என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News