எலச்சிபாளையத்தில் ஒருவருடத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர் உட்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.;

Update: 2024-10-27 12:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அகரம் ஊராட்சிக்குட்பட்ட, எலச்சிபாளையம் சந்தப்பேட்டை பகுதியில் சாக்கடை கழிவுநீர் அமைக்க வேண்டும். சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அந்த ஊராட்சியின் கவுன்சிலர் சுரேஷ் அவர்களின் 15வது மானிய நிதி குழுவின் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாக்கடை வசதிக்கும், காண்கிரீட் சாலை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது வரையில் அப்பணிகள் மேற்கொள்ளாக இருப்பதால் சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடத்திலும், ஒப்பந்ததாரரிடத்திலும் வலியுறுத்தியும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதை கண்டித்து நேற்று அப்பகுதியில் சாலையில் அமர்ந்து ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டம் தரையில் அமர்ந்து தர்ணாபோராட்டம் செய்தனர். தகவலறிந்துவந்த எலச்சிபாளையம் எஸ்.ஐ.,பொன்குமார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடனம் அமைதிபேச்சுவார்த்தை நடத்தினார். பி.டி.ஓ.,தனம் நாளை [இன்று] காலைமுதல் சாலைப்பணிகள் தொடங்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளித்ததின்பேரில் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தை கைவிடுத்து சென்றனர். மாக்சிஸ்டு கம்யூ.,கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், ராஜி, கவிதா, சிவா என பலர் கலந்துகொண்டனர்.

Similar News