ஆர்ப்பாட்டம்
ஈரோடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களை விலங்கு மாட்டி இந்தியாவிற்கு அனுப்பி வைத்த அமெரிக்க அரசை கண்டித்தும் அதை நியாயப்படுத்தி பேசும் மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்;
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அமெரிக்காவில் இந்தியர்களை கை,கால்களை விலங்கிட்டு ராணுவ விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து அவமானப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்தும் இதை தட்டிக் கேட்க தைரியம் இல்லாத பாசிச பாஜக மோடி அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சூரம்பட்டி காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ பி ரவி, நான்காம் மண்டல தலைவர் எச்.எம் ஜாபர் சாதிக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்களான, கே புனிதன், கே எஸ் செல்வம், கே பாஸ்கர்ராஜ், மாவட்ட பொது செயலாளர் இரா கனகராஜன், எ. வின்சென்ட், மாவட்ட செயலாளர் மாமரத்துப்பாளையம் கோபி, ஈரோடு, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் இரண்டாம் மண்டல தலைவர் ஆர் விஜயபாஸ்கர் நன்றி உரையாற்றினார்.*