Update: 2025-02-24 14:18 GMT
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் விருதுநகர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பளு தூக்கும் போட்டிகள்; உடலை இறுக்கி பளு தூக்கி பரிசு கோப்பைகளை தட்டிச் சென்ற வீரர்கள் வீராங்கனைகள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள பி.பி‌.விசாலா பள்ளி வளாகத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விருதுநகர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.‌ ஆண்கள் பெண்கள் என இரு பாலாருக்கும் தனித்தனியாக இந்த போட்டிகள் நடைபெற்றது. எடை அடிப்படையில் 55 கிலோ, 61கிலோ, 67 கிலோ, 73 கிலோ, 81 கிலோ, 89 கிலோ, 96 கிலோ, 102 கிலோ, 109 கிலோ, +109 கிலோ என ஆண்களுக்கு 10 பிரிவுகளிலும் அதேபோல 45 கிலோ, 49 கிலோ, 55 கிலோ, 59 கிலோ, 64 கிலோ, 71 கிலோ, 76 கிலோ, 81 கிலோ, 87 கிலோ, +87 கிலோ பெண்களுக்கு பத்து பிரிவுகளிலும் தனித்தனியாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் தங்களது உடலினை இறுக்கி கோப்பைகளை வென்றே ஆக வேண்டும் என்ற நோக்கில் பளு‌தூக்கி சாதனை படைத்தனர். இந்த போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பைகள் பாராட்டு சான்றிதழ் மெடல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.‌ இதில் ஆடவர் பிரிவில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப்பை சிவகாசி வீர அனுமான் ஜிம் தட்டிச் சென்றது. பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப்பை அருப்புக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பி கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி தட்டி சென்றது.

Similar News