பசுமை சாம்பியன் விருதுபெற  விண்ணப்பிக்கலாம்

பசுமை சாம்பியன் விருது பெற  விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

Update: 2025-02-26 07:36 GMT
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் 100 பேருக்கு விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பம் தொடர்பாக விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் மறுசுழற்சி உள்ளிட்ட பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும், அமைப்புகளுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. மாநில தேர்வுக்குழு மூலமாக மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3 தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும். விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnpcb.gov.inஎன்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிற ஏப்ரல் மாதம் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வடக்கு மற்றும் தெற்கு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News