கைது

கஞ்சா விற்றவர் கைது;

Update: 2025-03-01 06:59 GMT
அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், கோபியை அடுத்துள்ள சின்னக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில் அவர், காஞ்சிக்கோயிலை அடுத்துள்ள பள்ளபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (61) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Similar News