கோவையை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 24). லாரி டிரைவர். இவர் நேற்று பெங்களூருவில் இருந்து பாரம் ஏற்றி கொண்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சங்ககிரியில் இருந்து ஓமலூர் நோக்கி கூரியர் வேன் வந்தது. இந்த வேனை பென்னாகரம், குள்ளனூர் பகுதியை சேர்ந்த இளையராஜா (32) ஓட்டி வந்தார். சின்னப்பம்பட்டி சந்தப்பேட்டை மேம்பாலத்தில் லாரியும், கூரியர் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் இடிபாடுகளில் சிக்கி இளையராஜா பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.